யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

SHARE

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

16வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனிடையே சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நள்ளிரவில் நடைபெற்றது.

ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணியும், இரண்டாம் பாதியில் இத்தாலி அணியும் தலா ஒரு கோலுடன் சமநிலை வகிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.

பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன.

இதனடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு1968 ஆம் ஆண்டு மட்டும் ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன் கோப்பை வென்ற இத்தாலி அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை இத்தாலி அணி பரிசாக வழங்கப்பட்டது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வெற்ற ரவி தஹியா…ரூ. 4 கோடி பரிசு அறிவித்த ஹரியானா அரசு

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

கோபா அமெரிக்கா கால்பந்து: கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

Admin

இந்திய அணியை வழிநடத்த அவரே சிறந்தவர் : தோனியை புகழ்ந்த பிசிசிஐ

Admin

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

Leave a Comment