நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

SHARE

வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபரால் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார்.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, ஆதாரங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்டே ஆகணும் :இந்து மக்கள் கட்சியினர் கொந்தளிப்பு

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

யோகிபாபு நடராஜன் சந்திப்பின் போது தோனி இருந்தாரா? வைரலாகும் புகைப்படம்!

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

முதல்வரையே டேக் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மீரா மிதுன் ட்வீட்

Admin

Leave a Comment