ஸ்விகி செயலி மூலம் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஒருநாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பொதுவாக என் மனசு தங்கம், டிக்டிக்டிக், திமிர் புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு அதிர்ச்சி தகவலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதன்படி அவர், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி செயலி மூலம் Moonlight takeaway உணவகத்தில் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், அந்த ஹோட்டல் மீது புகைப்படத்துடன் ஸ்விகி இந்தியாவை டேக் செய்து புகார் அளித்துள்ளார். மேலும் Moonlight takeaway உணவகத்தை ஸ்விகி செயலியிலிருந்து நீக்கவும் நடிகை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த உணவகத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.