வாட்ஸ்அப் நிறுவனம் அடுத்ததாக தனது பயனாளர்களுக்கு 3 புதிய அப்டேட்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், வாட்ஸ்அப் செயலியில் விரைவில் மூன்று புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என்பதை தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த உரையாடல்களை தானாக அழியும் disappearing வசதியை எல்லா உரையாடல்களிலும் பயன்படுத்தும் விதமாகவும், நீங்கள் ஒருவருக்கு தகவல் அனுப்புவதற்கு முன் அதனை சரிபார்க்க “view once” வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.
மூன்றாவதாக multi device எனப்படும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் இயங்கும் வண்ணம் அந்த புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் வாட்ஸ்அப் பீட்டா வழியாக iOS பயனர்களுக்கு இது கிடைக்கும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்