தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு சென்ற கர்நாடக பழங்குடியினரை லாரி ஓட்டுநர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்துள்ள பொள்ளாச்சி மலைப்பகுதியில் வேலைப்பார்த்து வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 72 பழங்குடியினரை லாரி மூலம் சொந்த ஊருக்கு பொள்ளாச்சி வட்டாட்சியர் அனுப்பி வைத்தார்.
ஆனால் சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதை அருகே லாரி வந்த போது மலையில் வாகனம் ஏறாது எனக் கூறி ஓட்டுநர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகத்தில் செய்வதறியாது நின்றுள்ளனர். அவர்களைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மனிதாபிமானத்துடன் 75 பேருக்கு உணவு வழங்கி தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
– மூவேந்தன்