சென்னையில் பிரபல பள்ளியான பிஎஸ்பிபியில் ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அப்பள்ளியின் மீது பாலியல், ஜாதி ரீதியான பிரச்சனைகளை சந்தித்ததாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி சில மாதங்கள் முன்பு தனது யூடியூப் பக்கத்தில் பிஎஸ்பிபி பள்ளி மீது குற்றச்சாட்டு வைத்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசும்போது, என்னுடைய மகளுக்கு அப்பள்ளியில் சீட் வாங்க வரிசையில் நின்றிருந்த போது திருமதி ஒய்ஜிபி அழைத்ததால் அவருடைய அறைக்கு சென்றேன். என்னம்மா நீ எல்லாம் வரிசையில் நிற்கலாமா? என கேட்டார்.
நான் பல சீரியல்கள்ல ஆக்ட் பண்ணியிருக்கேன், டிராமா, திரைப்படம் எல்லாம் பண்ணியிருக்கேன் ஆனாலும் யாரிடமும் போய் குழந்தைக்கு ஆப்ளிகேஷன் கேட்கிறது எனக்கு பிடிக்கவே பிடிக்காது .பள்ளியில் என் மகளுக்கு சீட் கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். பள்ளியில் படித்துகொண்டு இருந்த பொழுது ஒரு மாதம் கழித்து மேடம் அழைப்பதாக தகவல் வந்தது. என் மகள் எதாவது தப்பு பண்ணிட்டா போல என நினைத்துக்கொண்டே பள்ளிக்கு போனேன்.
பள்ளிக்குச் சென்றதும் நீ வருமானவரித்துறைக்கு சீரியல் பண்ணிக்கிட்டு இருக்கியே, ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து நான் பார்த்துக்கிட்டு இருக்கேன்னு சொன்னாங்க. வருமான வரித்துறை சேர்மனை நீங்க சந்தித்து இருக்கீங்களான்னு என்று கேட்டாங்க. அவரை பார்த்து தான் அப்ரூவலே வாங்கி இருக்கோம் என்று நான் கூறினேன். ஒவ்வொரு வாரமும் ஸ்டோரி எல்லாம் அவர் தான் கிளியர் பண்ணுவாரு என்று சொன்னேன். அவர்கிட்ட ஒரு சின்ன வேலை இருக்கு. திருமதி ஒய்ஜிபி, ‘எங்க’ளுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்க மாட்டேன் என்கிறார் – என்றார்.
அப்படியா என்ன விஷயம் என கேட்டேன். கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம். அது ஸ்கூல் அக்கவுண்ட்ல வாங்கியிருக்க வேண்டும் ஆனால் வேறு ஒரு அக்கவுண்ட்ல வாங்கி இருகாங்க அது சட்டப்படி தப்பு போல என எண்ணினேன். வருமான வரித்துறை பெரிய அளவில் வரி போட்டுட்டாங்க போல இருக்கு. அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்கணும்னு கேட்டாங்க. அப்ப தான் எனக்கு புரிந்தது. இவங்க இதுக்காகத்தான் எனக்கு சீட் கொடுத்திருக்காங்க. உண்மையிலே என் மேல இருந்த அன்புனால கொடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டேன். – என்று குறிப்பிட்டார்.
மேலும் குட்டி பத்மினி தனது டுவிட்டர் பதிவில், பதமா சேஷாத்ரி பால பவன் பள்ளியினர் நுங்கம்பாக்கம் வசந்தியை விசாரிக்க வேண்டும் என்றும், தானும் தன்னைப் போன்ற பல பெற்றோர்களும் அவரால் கடும் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி இடுப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்தப் பதிவுகள் இரண்டும் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகி வருகின்றன.
- பிரியா வேலு