இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

SHARE

மத்திய அரசு புதிதாக உருவாக்கிய சமூக வலைதள விதிகளுக்கு கட்டுப்படாமல் இருக்கும் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லி

சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது. 

அந்த விதிகளில், சமூக வலைத்தளங்களில் பெண்கள் குறித்த தவறான படங்கள் பரவுவதாக புகார் வந்தால், அடுத்த ஒரு நாளுக்குள் அவை நீக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு வரும் புகார்கள் குறித்து சமூக வலைத்தளங்கள் தெரிவிக்க வேண்டும், புகார்களை கவனித்து நடவடிக்கை எடுக்க என்றே தனி அதிகாரிகளை சமூக வலைத்தளங்கள் நியமிக்க வேண்டும், தவறான தகவல்களை நீக்குவதோடு அவற்றைப் பரப்பியவர்களையும் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்க வேண்டும், சமூக வலைத்தளங்கள் மூலம் குற்றத்தில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், அரசு அல்லது நீதித்துறை கேட்கும் தகவல்களை சமூக வலைத்தளங்கள் கொடுக்க வேண்டும், ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட வேண்டும் – என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்தியாவைச் சேர்ந்த கூ உள்ளிட்ட ஒருசில செயலிகள் மத்திய அரசின் புதிய சமூக ஊடக வழிகாட்டுதலுக்கு இணங்குவதாக தெரிவித்தன. ஆனால் பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன.  அந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. ஆனால் இந்த சமூகவலைத்தளங்கள் இதுகுறித்து இன்று வரை உரிய பதிலளிக்கவில்லை. 

இதனால் அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிப்பது மட்டுமின்றி குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதனால் நாளை முதல் சமூக வலைத்தளங்கள் தடை விதிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் அரசுகளும் சமூக வலைத்தளங்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சுமூகமான முறையில், இருவருக்கும் பாதிப்பில்லாத வகையிலும் விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

  • பிரியா வேலு

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி? – உலக சுகாதார அமைப்பு தீவிர பரிசீலனை

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

மக்கள் பத்திரிக்கையாளர் டேனிஷ் உடல் ஜாமியா பல்கலை.யில் அடக்கம்

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

நிலமை மோசமானால் மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவைப்படலாம் – எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர்!

Admin

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

Leave a Comment