பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

SHARE

மேற்கு வங்கத்தின் பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடவுள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். இருப்பினும், மம்தா பானா்ஜியை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுத்தனா். அதனடிப்படையில், மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது.

ஆனால் அவர் மீண்டும் எதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டும் முதலமைச்சராக தொடர முடியும் என்பதால், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் மம்தா போட்டியிட்டு வென்ற பவானிப்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை  ராஜிநாமா செய்துள்ளதால் இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

Admin

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

என் மீது போக்சோ வழக்கா? கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா சொன்னது என்ன?

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

எஸ்.பி.ஐ சேர்மனை நீதிமன்ற காவலில் வைப்பதா? – தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் நடப்பது என்ன?

Pamban Mu Prasanth

தவன் அதிரடி! – பஞ்சாப்பை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி!.

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

வெற்றி பெற்ற அணி… எச்சரிக்கப்பட்ட கேப்டன்!.

சே.கஸ்தூரிபாய்

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

Leave a Comment