இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

SHARE

இந்தியாவில் பல்லாயிரம் மரங்கள் பாதுகாக்கப்படவும், பலநூறு ஆதிவாசி இனங்கள் இன்னும் உயிர்த்திருக்கவும் காரணமான சூழலியல் போராளி சுந்தர்லால் பகுகுணா தனது 94ஆவது வயதில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக இன்று மறைந்திருக்கிறார்.

1927ல் உத்திரகாண்ட் மாநிலத்தில் பிறந்து, இள வயதில் காந்தியடிகளைப் பின்பற்றிய பகுகுணா 1974ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் சில ஆதிவாசிப் பெண்கள் நடத்திய சிப்கோ போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார்.

சிப்கோ என்ற சொல்லுக்கு ஒட்டிக் கொள்ளுதல் என்பது பொருள். உத்தரகாண்ட் மாநிலத்தின் காட்டுப்பகுதிகளில் மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த மரங்களை வெட்டிக் கொள்ள அன்றைய காங்கிரஸ் அரசு சில தனியாருக்கு அனுமதி அளித்தது. இதனைத் தடுக்க உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் அந்த மரங்களைக் கட்டிப் பிடித்து ஒட்டி நின்றனர். எங்களை வெட்டிய பின்பு மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்றனர். கோடாரிகள் ஓங்கப்பட்டபோதும் அவர்கள் கலங்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்படியாகத்தான் உருவானது சிப்கோ போராட்டம். 

முன்னதாக 1730ஆம் ஆண்டில் இதே சிப்கோ போராட்டத்தை பிஷ்னோய் இன பெண்கள் ஜோத்பூர் அரசரின் மரம் வெட்டும் திட்டத்துக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர். அப்போது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோதும் பெண்கள் போராட்டத்தில் பின்வாங்கவில்லை. அவர்களின் பிணங்களின் மீது ஏரி நின்றுதான் மரங்கள் வெட்டப்பட்டன. அதன் தொடர்ச்சிதான் இந்தப் போராட்டம்.

உறுதிமிக்க இந்தப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் போதிய கல்வியற்ற பழங்குடிகள் என்பதாலும், இவர்களை சட்டம் மூலம் மத்திய அரசு ஒடுக்கிவிடக் கூடாது என்பதாலும் இவர்களுக்கு நேரில் சென்று வழிகாட்டினார் சுந்தர்லால் பகுகுணா. சிப்கோ போராட்டத்தை ஒரு வலுவான இயக்கமாக மாற்றினார். 

இமய மலைப் பகுதியில் உள்ள மரங்களைக் காக்க, 5,000 கிலோ மீட்டர்களுக்கு நெடுந்தூர நடை பயணம் மேற்கொண்டார். இதனால் அப்போது தொழில் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்த ஊடகங்கள் முதன்முறையாக சூழலியல் குறித்து பேசத் தொடங்கின.

1980ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி பகுகுணாவின் போராட்டங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாகவே சுற்றுச் சூழலுக்கு ஒரு துறையை ஏற்படுத்தினார், பின்னர் அது சுற்றுச் சூழல் அமைச்சகமானது!.

தொடக்கத்தில் ஆதிவாசி ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமான இயக்கமாக சிப்கோ இயக்கம் இருக்க வேண்டும் என இவர் கருதினாலும், மது மற்றும் பணம் ஆகியவற்றுக்காக இவர் கூடவே இருந்த பலர் இடம் மாறியதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

ஆதிவாசிப் பெண்கள் அன்பின் பிறப்பிடமாகவும் சத்தியத்தை மீறாத உறுதி உள்ளவர்களாகவும் இருப்பதைக் கண்டு, பெண்கள் குழுக்கள் மூலமே தனது போராட்டங்களை முன்னெடுத்தார். இவர் வழிநடத்திய பெண்கள் குழு அப்போது ’லேடி டார்ஜான் குழு’ என்று அழைக்கப்பட்டது. ஆதிவாசிகளைக் கொண்டு சூழலைப் பாதுகாத்ததோடு ஆதிவாசிகள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்றும், சட்டத்திற்கு உட்பட்டு போராட்டங்களை முன்னெடுப்பது எப்படி என்றும் சுந்தர்லால் பகுகுணா அவார்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

இடிந்தகரையோ, தூத்துக்குடியோ, நெடுவாசலோ மக்கள் தங்கள் வளத்தைப் பாதுகாக்க இன்று தாங்களே கூடுகிறார்கள் என்றால் அதன் பின்னே பகுகுணா உருவாக்கிய விழிப்புணர்வு உள்ளது.

இவரது சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ, பதம பூஷண் ஆகிய விருதுகளை அளித்துள்ளது. ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி. இவருக்கு சமூக அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது.

இயற்கையை மனிதன் அழித்தால் இயற்கை மனிதனை அழிக்கும் என்றும், காடுகளைப் பாதுகாப்பதே நிலையான பொருளாதாரம் என்றும் முழங்கிய பகுகுணாவின் இழப்பு இந்திய சூழலியல் துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

கிசான் திட்டம்.. ரூ.19,500 கோடியை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

Admin

இ-ருபி பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமா் மோடி

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம புதுப்பித்தலுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

Admin

என் இனிய பானிபூரி..திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்!

Admin

தோற்க வேண்டிய ஆட்டத்தை வென்றெடுத்த மும்பை இண்டியன்ஸ்!. கோட்டை விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

சே.கஸ்தூரிபாய்

மார்ச் 31 – ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்

Admin

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

Leave a Comment