தமிழகத்தில் 24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2ஆவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் இந்தநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், கொரோனா தொற்றின் வேகம் குறையாத காரணத்தால் கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
24ஆம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேலும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கெளசல்யா அருண்