டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

SHARE

டவ்-தே புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் மும்பையில் அதீத கனமழை பெய்யும் எனவும் குஜராத்தை புயல் தாக்கக்கூடும் எனவும்  வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, இன்று உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தருக்கும் மஹுவாவுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

இதனால் மும்பையில் அடுத்த சில மணிநேரத்திற்கு அதீத கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 120 கி.மீ.க்கு காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கொரோனாவால் மோசமான பாதிப்புகளை சந்தித்துவரும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில மக்களுக்கு டவ்-தேவின் பாதிப்பு குறித்த புதிய அச்சம் எழுந்துள்ளது.

– கெளசல்யா அருண்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

6 முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!!

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி? – பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் நடந்த குழப்பம்

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

என்னது ஜூலை மாதத்திலே கொரோனா மூன்றாம் அலை ஆரம்பிச்சுட்டா ? ஹைதராபாத் விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்

Admin

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிப்பு..!!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

தடுப்பூசியை மாற்றிப்போட்ட சுகாதாரத்துறை! – உ.பி.யில் இன்னொரு அவலம்.

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

Leave a Comment