கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

SHARE

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  தடுப்பூசி மட்டும்தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வாக சொல்லப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படுகின்றன. மேலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கொரோனாவுக்கு எதிரான 2-டிஜி என்ற மருந்தை தயாரித்துள்ளது.  தண்ணீரில் கலந்து உட்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை  டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கி உள்ளன. இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவும் என்பது பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. எனவே, அவசரகால தேவைக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.

இதையடுத்து 2-டிஜி மருந்தை டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். 

முதல்கட்டமாக 10,000 மருந்து பாக்கெட்டுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். இந்த மருந்துகள் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– கெளசல்யா அருண்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

26 ஆண்டுகால புகைக்கும் பழக்கம்… மீண்டது எப்படி? – எழுத்தாளரின் அனுபவப் பதிவு…

முடிவுக்கு வரும் ஊரடங்கு … தெலுங்கானாவில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்

Admin

தனது மகளையே மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் – பதறவைக்கும்வீடியோ!

Admin

ஓட்டுநர் உரிமம் எடுக்க இனிமேல் RDO ஆபீஸ் செல்ல தேவையில்லை… புதிய நடைமுறை அறிவிப்பு

Admin

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

அடேங்கப்பா.. இவர் பெயர் இருந்தாலே போதும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசம்!

Admin

Leave a Comment