ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

SHARE

நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது!.

மும்பை:

ஐபிஎல் டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 

முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதனால் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்கத்தில் களம் இறங்கிய டூபிளேஸிஸ் மற்றும் ருதுராஜ் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதற்கு பிறகு வந்த ரெய்னா மற்றும் மொயின் அலி ஜோடி நன்றாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். ”வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”- என்பது போல அதிரடியாக ஆடி 54 ரன்களை எடுத்தார் ரெய்னா. மொயின் அலி 36 ரன்கள், ராயுடு 23 ரன்கள்னு தொடர்ந்து ஆட்டம் களைகட்டியது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டான் இருந்த தோனி ரன் எதுவும் எடுக்காமலேயே அவுட் ஆனார்.  இறுதியில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரனின் பார்ட்னர்ஷிப் நன்றாக அமைந்து, இவர்கள் 51 ரன்கள் குவித்தனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் நல்ல ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடனேயே செயல்பட்டது நன்றாகவே தெரிந்தது. திட்டமிட்டு அதிரடியாகவும் ஆடி ரன்களை குவித்தனர். 20 ஓவர்களில் 188 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருந்தது. இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது. இதனால் அடுத்து ஆடும் டெல்லி அணிக்கு சிரமமான ஆட்டமாகத்தான் இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால் அடுத்து களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா மற்றும் தவான் இறங்கினர். இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிருத்வி ஷா 72 ரன்களும், தவான் 85 ரன்களும் குவித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிர்கள் இவர்கள் ஆட்டத்திலேயே திணறி விட்டனர். இவர்கள் இருவருமே ஆட்டத்தை முடித்து விடுவார்களோ என்ற அச்சமும் ரசிகர்களுக்கு எழுந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கர்ரன், வோக்ஸ், தீபக் சாஹர், தாக்கூர், பிராவோ என்று பிரபல பவுலர்களைக் கொண்டொஇருந்தும் பவுலிங்கில் கோட்டை விட்டுவிட்டது. இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி போட்டியை வென்றது. சென்னை அணி முதல் போட்டியிலேயே தோற்றாலும், பேட்டிங்கில் நல்ல ஆட்டத்தையே கொடுத்தனர். 

மொத்ததில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் எப்படி இருந்தது என்றால் “ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்டைக் காப்பாற்ற முடியல” மொமண்ட்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Admin

ஊரடங்கில் இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…!

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு : மு.க.ஸ்டாலின்!

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

Admin

Leave a Comment