7 முறை மின்னல் தாக்கிய ‘மனித இடிதாங்கி’!.

SHARE

மனிதர்கள் சந்திக்க வாய்ப்புள்ள மிக அரிய விபத்துகளில் ஒன்றுதான் மின்னல் தாக்குவது. சராசரியாக 5 லட்சத்தில் ஒருவரைத்தான் மின்னல் தாக்குகின்றது. ஆனால் மின்னல் தாக்கியவர்கள் பிழைப்பது அரிது, பிழைத்தாலும் இயங்கும் நிலையில் வாழ்வதும் அரிது. இரண்டுமுறை மின்னல் தாக்கியும் பிழைத்தவர்களை உலக வரலாற்றில் விரல்விட்டு எண்ணிவிடலாம். 

ஒரு மனிதரை 3 முறைகளுக்கும் மேல் மின்னல் தாக்க கணித சாத்தியங்களே இல்லை. ஆனால் உண்மையாகவே ஒரு நபர் 7 முறை மின்னலால் தாக்கப்பட்டு அத்தனைமுறையும் உயிர்பிழைத்து உள்ளார் – என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?. மிக அதிகமுறை மின்னலால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரரான அவரது பெயர் ராய் சல்லிவன்!.

அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்காவில் பாதுகாவலராகப் பணியாற்றும் ராய் கிளீவ்லாண்ட் சல்லிவன் 1942ஆம் ஆண்டில் தனது 30ஆவது வயதில் முதன்முறையாக மின்னலால் தாக்கப்பட்டார். அதற்குப் பின்னர் 1977ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 7முறை அவர் மின்னலால் தாக்கப்பட்டார்!.

ஒவ்வொருமுறை மின்னல்தாக்கும்போதும் அவருக்கு காயங்கள், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. ஆனாலும் மின்னலின் தாக்குதல் அவருக்கு மரணத்தையோ முடக்கத்தையோ விளைவிக்கவில்லை. இதனால் ராயை அமெரிக்கர்கள் ‘மனித இடிதாங்கி’ என்றே அழைத்தனர். மழைக் காலங்களில் ராய் மின்னலைத் தன்னை நோக்கி இழுக்கக் கூடும் என்பதால் பலரும் அவருக்கு அருகில் வருவதையே தவிர்த்தனர். இப்படியாக ராய் வாழ்வின் பெரும்பகுதியைத் தனிமரமாகவே கழித்தார்.

ஒரு மனிதரை 7 முறை மின்னல் தாக்க அறிவியல் ரீதியான எந்தக் காரணங்களும் இதுவரை விளக்கப்படவில்லை. இது எப்படி நடந்தது என்ற கேள்விக்கு ‘இயற்கையைப் புரிந்து கொள்வது எளிதல்ல’ என்றே அறிவியலாளர்கள் பதில் தருகிறார்கள்.

மின்னல்களால் கொல்ல முடியாத ‘மனித இடிதாங்கி’ ராயை அவரது தனிமைதான் இறுதியில் கொன்றது. 1983ஆம் ஆண்டில் தனது 71ஆவது வயதில் ராய் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்!. மின்னல் தாக்கிய போது அவர் அணிந்திருந்த இரண்டு எரிந்துபோன தொப்பிகள் இன்றும் அமெரிக்க மக்களால் அதிசயப் பொருட்களாகப் பார்க்கப்படுகின்றன.

  • இரா.மன்னர் மன்னன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

யாரை பழிவாங்க இந்த கருப்பு உடை: நயன்தாரா உடைக்குப் பின் இப்படி ஒரு வரலாறா?

Admin

1928ல் செல்போனா? – சாப்ளின் படத்தின் விநோத காட்சி!.

இரா.மன்னர் மன்னன்

8 சிங்கங்களுக்கு கொரோனா!

ஆன்லைனில் வறுத்த கோழி ஆர்டர் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Admin

அப்பாவை வேலை பார்க்க விடாத சுட்டிக் குழந்தை – இணையத்தில் வைரலாகும் காணொலி!.

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

வெள்ளை மாளிகையையே விற்ற திருடன்!.

Leave a Comment