வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பிற 11 ஆவணங்களைக் காட்டியும் வாக்கு செலுத்தலாம்
ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் வாக்களிக்கலாம். அப்போது வேறு எந்த ஆவணங்கள் பயன்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாகவே பட்டியலிட்டு உள்ளது. அந்த ஆவணங்கள்
1. ஆதார் அட்டை
2. பான் அட்டை
3. ஓட்டுநர் உரிமம்
4. கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்)
5. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
6. வங்கி மற்றும் தபால் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் அடையாள அட்டை
8. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள்
9. தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டிற்கான ஸ்மார்ட் கார்டு
10. மக்கள் தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்ட்
11. எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள்
இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தைக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம்.
- நமது நிருபர்.