உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

SHARE

மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் எதிர் பதிவுகளுக்கு பிரபல யூடியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் பதில் அளித்து உள்ளனர்.

அரசியல் நையாண்டி காணொலிகளைத் தொடர்ந்து வெளியிடும் பிரபல யூ டியூப் வலைக்காட்சியான நக்கலைட்ஸ் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி  நடிகர் கமல்ஹாசனின் அரசியலைக் கேலி செய்து ‘உன்னால் முடியாது தம்பி’ என்ற காணொலியை வெளியிட்டனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பல வகைகளிலும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். 

இன்னொரு பக்கம் உன்னால் முடியாது தம்பி காணொலியும் யூ டியூபில் பிரைவேட் காணொலியாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் பார்க்க இயலாதபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்தக் காணொலியின் பல பகுதிகள் சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸப்பிலும் வைரலாகி வருகின்றன. இதனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திப் பகிர்வுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில் நக்கலைட்ஸ் நிர்வாகம் இந்த சர்ச்சை குறித்த தங்கள் தரப்பு பதிலை தங்கள் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இது விளக்கமாகவோ, வருத்தமாகவோ அல்லாமல் பதிலடியாகவே உள்ளது.

நக்கலைட்ஸ்களின் இந்த முகநூல் பதிவும் வைரலாகி வருகின்றது. 

https://www.facebook.com/Nakkalites/posts/3920913667974910

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

‘‘ஸ்டேன் சாமி மரணம்சட்டத்தின் துணையோடு நடந்த படுகொலை”

Admin

திமுக ஆட்சி எம்.ஜி.ஆருக்கு அவமானம் – ஜெயலலிதா குறித்தும் பேசி கொதிக்கும் மோடி

Pamban Mu Prasanth

சொன்னதை செய்தார் தங்கம் தென்னரசு!. நியாயமான விலையில் சிமெண்ட் விற்கப்படும் என உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு.

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

கொரோனா மூன்றாம் அலை : டோரா, மிக்கி மவுஸுடன் தயாராகும் வார்டுகள்!

Admin

ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்

Admin

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – இந்த 11 ஆவணங்களில் ஒன்று போதும்

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

தமிழர் இருந்தும் மகிழ்ச்சியில்லை: மத்திய அமைச்சரவை குறித்து கமல் விமர்சனம்!

Admin

Leave a Comment