ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

SHARE

இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர் தாதா சாகேப் பால்கே என்னும் துண்டிராஜ் கோவிந்து பால்கே. யார் இந்த பால்கே? ஏன் இவரை இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என கூறுகிறார்கள்? எதற்காக இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது? என்று பார்க்கலாம்…

தாதாசாகேப் பால்கே 1870ல் நாசிக் அருகே உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். பம்பாய் ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கை காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் கற்றார்.

இந்தியாவுக்கு திரைப்படம் என்ற கலையே முழுதும் அறிமுகமாகாத காலகட்டத்தில், பால்கே தனது தீவிர முயற்சியால் ஒரு முழு நீளத் திரைப்படத்தை 1913ல் தயாரித்து இயக்கினார். அப்படியாக இவர் தயாரித்து இயக்கிய “ராஜா ஹரிச்சந்திரா” தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமாகும். அதற்கு முன்பு வெளிவந்த படங்கள் எல்லாம் முழுமையடையாத முயற்சிகளாக மட்டுமே இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் திரைப்படம் எடுப்பது சுலபமான காரியம் இல்லை. நாடகங்களில் நடிக்கவே பெண்கள்  பெரும்பாலும் அனுமதிக்கப்படாமல் இருந்த காலம் அது. இதனால் பால்கே தனது குடும்பத்திலிருந்த 18 பேரை வைத்து “ராஜா ஹரிச்சந்திரா” படத்தை உருவாக்கினார். 

1910 முதல் 1937 வரை 95 முழு நீளத் திரைப்படங்கள், 27 குறும்படங்கள் ஆகியவற்றை இவர் உருவாக்கி உள்ளார். இவரின் இந்துஸ்தான் பிலிம் கம்பெனி மூலம் 75 படங்கள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலும் அவர் தயாரித்த திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார். இந்தியத் திரைப்படத்தின் முன்னோடியான பால்கே 1944ம் ஆண்டு  பிப்ரவரி 16-ஆம் தேதி இயற்கை எய்தினார் .

இதன் பின்னர் அவரின் பெயரால் இந்தியாவின் மிக உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே” விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்குகிறது. இது இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். 1969-ல் தான் முதன்முதலில் இவ்விருது வழங்கப்பட்டது. தேவிகா ராணி என்ற நடிகைதான் பால்கே விருது பெற்ற முதல் சாதனையாளர் ஆவார்.

தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன்(1996),இயக்குனர் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள்,திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியா வேலு


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

Admin

வலிமை திரைப்படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்!!!

Admin

‘நீ ஜெயிச்சிட்ட மாறா’…அமிதாப்பச்சனை கதறி அழவைத்த சூர்யா பட பாடல்

Admin

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்..புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

Admin

முட்டாள்தனமான கருத்தை நான் சொன்னதே கிடையாது: இம்ரான் கான்

Admin

என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

Admin

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்.. சென்னை வந்த பூஜா ஹெக்டேயின் புகைப்படம் வைரல்

Admin

மிரட்டலாக வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் டைட்டில் லுக்… இயக்குனர் யார் தெரியுமா..?

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

Leave a Comment