24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

SHARE

மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடு செய்ய வலியுறுத்தியும், இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக டெல்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை எனவும், அதை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது. எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாகவும், ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? வெளியானது தகவல்

Admin

மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

Admin

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

’ஜெய்பீம்’ படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலை வழக்கு – உண்மையில் நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

இளைஞர்களின் எனர்ஜி டானிக்..வீரப்பனுக்கு சிம்மசொப்பனம் … யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்?

Admin

ஆக்சிஜன் கையிருப்பை கண்காணிக்க ’வார் ரூம்’… அசத்தும் கேரளம்!

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

Leave a Comment