தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

SHARE

தமக்கென்று இறையாண்மை அதிகாரத்தை அடையப் போராடும் ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறுகளாக விளங்குபவை மரபுவழிப்பட்ட நிலம், அரசு, தாய்மண்ணையும் மக்களையும் போற்றும் கலை இலக்கியப் பண்பாடு, தலைசிறந்த இன ஓர்மை முதலியனவாகும்.

இந்நூல் இமயம் முதல் குமரி வரை பேரரசாக‌ தமிழன் வாழ்ந்த பொற்காலம் முதல் தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் தனது தாய்நிலத்தில் திரும்பும் திசையெங்கும் வேற்றினத்தார் ஆதிக்கத்தில் தமிழன் சிக்குண்டு வாழும் இருண்டகாலம் வரை தமிழர் வரலாற்றைப் பதிவு செய்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழர்கள் தங்களது நிலப்பரப்பை எவ்வாறு இழந்தனர்? யாரிடம் இழந்தனர்? என்பதை இலக்கியம், கல்வெட்டு, நில வரைப்படம் முதலிய சான்றுகளோடு தெளிவாக விளக்குகிறது. கடந்தகால வரலாறு தெரியாதவர்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழன் தன் மண்ணை இழந்த வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கும் முதல் தமிழ்த்தேசிய நூல் இதுவே.

இழந்த வரலாற்றை பேசுவதோடு அல்லாமல் இழந்த நிலங்களை மீட்டு புதியதொரு தேசம் படைக்கவும் வழிகாட்டுகிறது இந்நூல். தமிழ்த்தேசியம் குறித்தும் அதை அடைவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறிக் குழப்பிவரும் நிலையில் இந்நூலாசிரியர் ‘தமிழ்த்தேசியம் என்பது தமிழர் தம் தாய்நிலத்தில் வல்லாண்மையோடு தனது இராணுவத்தை நிலைநிறுத்தி இறையாண்மை அதிகாரத்தோடு வாழ்வதாகும்’ என்று எந்த சமரசத்திற்கும் இடமின்றி மிகவெளிப்படையாகவும் அழுத்தமாகவும் பதிவுசெய்கிறார்.

ஆயிரம் பக்கங்களில் பலநூறு புத்தகங்களை எழுதி அதை பகிர்ந்து தமிழ் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி பல நூற்றாண்டிற்கு பிறகு இன எழுச்சி ஏற்பட வழிவகுக்குவதற்கு பதிலாக இந்த ஒற்றை நூலை பல்லாயிரம் பிரதிகள் அச்சடித்து உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தால் சில நாட்களில் பெருந்தமிழின எழுச்சி ஏற்படும் என்பது என்னுடைய உறுதியான கருத்து. ஒவ்வொரு தமிழரும் தலைமுறைகள் தோறும் தங்கள் பிள்ளைகளுக்கு கடத்த வேண்டிய ஓர் அதிஉயர்ந்த வரலாற்று பெட்டகம் இந்நூல்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த நாடற்ற யூதர்கள், தங்களது நாடிழந்த வரலாற்றை தலைமுறைகள் தோறும் கடத்தி, தன் பலத்தை பெருக்கி, பின் இழந்த நாட்டை மீட்டு, தன் தாய்நாடு திரும்பிய வரலாற்றை பதிவு செய்த ‘தாயகத்தை நோக்கிய பயணம்’ என்னும் நூல் எப்படி யூதர்களின் இன எழுச்சி நூலாக விளங்குகிறதோ அதுபோல் தமிழர்கள் தங்களுக்கான இறையாண்மை அதிகாரம் கொண்ட தமிழர்நாட்டை அடைய வழிகாட்டும் இந்நூல் தமிழர்களின் இன எழுச்சி நூலாக விளங்கும் என்பது திண்ணம்.

  • சந்திரன்

பதிப்பாளர்:
யாளி வெளியீட்டகம்,
காஞ்சிபுரம்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அஞ்சலை அம்மாள் முதல் அப்துல் கலாம் வரை – யார் யாருக்கு சிலைகள்?

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

சிவசங்கர் பாபாவின் இ-மெயில் முடக்கம்… சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை…

Admin

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

தலைமறைவாக இருந்த யூடியூபர் மதன் கைது

Admin

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு..!!

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment