முதல் குவாலிபையர் போட்டி… சி.எஸ்.கே.வில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்னென்ன?

SHARE

ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், முதல் குவாலிபையர் போட்டி இன்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்குக்கிடையே நடைபெறவுள்ளது. 

லீக் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

துபாய் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச் தான். அதே மாதிரி ஃபெளலிங்ல ஸ்லோயர் மற்றும் ஸ்பின் பால்களுக்கு சாதகமாவும் இருந்திருக்கு. துபாய் ஸ்டேடியம்ல இது வரைக்கும் சேஸிங் பண்ணவங்கதான் அதிக முறை வெற்றி பெற்றிருக்காங்க. அதனால் தோனி டாஸ் ஜெயிச்சா, சேஸிங்தான் எடுப்பார்ன்னு நம்பலாம். இந்த ஸ்டேடியம் சேஸிங்கு சாதகமா இருக்குன்னு சொன்னாலும், இதோட அதிகபட்ச ரன்னே 130, 140 தான். 

இதுவரைக்கும் நடந்த லீக் போட்டிகள்ல சென்னை மற்றும் டெல்லி அணி மோதின மொத்த ஆட்டங்கள்ல, அதிக முறை ஜெயிச்சிருக்குறது என்னவோ சென்னை அணிதான், ஆனா கடைசியா இந்த ரெண்டு அணிகள் மோதின  5 போட்டில டெல்லி தான் அதிகமா ஜெயிச்சிருக்கு அதுவும் 4 முறை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் டாப் ஆர்டர் நல்ல ஃபார்ம்ல இருக்கு, ருதுராஜ் மற்றும் டூப்ளஸி நல்லா பண்ணியிருக்காங்க. ஆனா சென்னைக்கு பிரச்சனையே மிடில் ஆர்டர்ல தான். ராயுடு கொஞ்சம் தடுமாற்றமா இருக்காரு. சில மேட்ச்ல ரொம்ப நல்லாவும், சில மேட்ச்ல சுமாராவும் இருக்காரு. ரெய்னா சுத்தமா ஃபார்ம்ல இல்ல. நல்லா ஆரம்பிக்குறாரு ஒண்ணு ரெண்டு பவுண்டரி அடிச்சுட்டு கிளம்பிடுறாரு. கடைசி ரெண்டு மேட்ச்ல அவருக்கு பதில் உத்தப்பாவ போட்டாரு தோனி, ஆனா அவரும் ஃபார்ம்ல இல்ல. லோயர் ஆர்டர் பக்காவாவே இருக்கு, ஜடேஜா மற்றும் ப்ராவோ இருக்காங்க. அதே மாதிரி பவுலிங்ல, தீபக் சஹர், மொயின் அலி, தாக்கூர்லாம் இதுவரை நடந்த எல்லா போட்டிகள்லயும் சிறப்பா பண்ணியிருக்காங்க. 

எப்பவும் தோனி ஃபிளேயிங் 11-யை மாத்தினது இல்ல. ஆனா இன்னைக்கு நடக்கபோற குவாலிஃபயர் மேட்ச்ல பிளேயிங் 11ல மாற்றம் இருக்கலாம்ன்னு எதிர்ப்பார்க்கப்படுது. மிடில் ஆர்டர்ல, சொதப்பல் இருக்குறதுனால ரெய்னா, உத்தப்பாவுக்கு பதிலா தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்ன்னு எதிர்பார்க்கப்படுது. இதே போல பவுலிங்குலயும் ஹசில்வுட்டிற்கு பதிலாக ஆஸ்திரேய வேகபந்து வீச்சாளர் பெகண்டோர்க்கு வாய்ப்பு வழங்கபடலாம்ன்னு எதிர்பார்க்கபடுது. 

இந்த போட்டில சென்னை அணிக்கு எதிரணில இருக்குற கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர்கள் ஷிகர் தவன், ப்ரித்வி ஷா,  ஸ்ரேயஸ் அய்யர். 

அடுத்து ஃபெளலிங்குல லோடியா,  மற்றும் அக்ஷர் பட்டேல் நல்லா பண்ணியிருக்காங்க. ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் போடுறாங்க, இவங்க ரெண்டு பேரும் நல்ல எகானமியும் வெச்சிருக்காங்க.  

தொடர் தோல்விகள சந்திச்ச சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குவாலிபையர் மேட்ச்ல அப்டி அசால்ட்டா விட்ற மாட்டாங்க, நல்ல ஒரு கம்பேக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுப்பாங்கன்னு ரசிகர்கள் நம்புறாங்க…

  • சே.கஸ்தூரிபாய்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி .. இந்திய அணி வெற்றி!

Admin

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

டிஎன்பிஎல் 2வது ஆட்டம் மழையால் ரத்து: கடுப்பான ரசிகர்கள்

Admin

Leave a Comment