தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 26 அன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோவால் வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்துக்கான தேர்தல் அட்டவணை தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6 என வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் மறைவு காரணமாக காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையின்படி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இத்தோடு 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு 3 கட்டமாகவும், 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவுக்கு ஒரே கட்டமாகவும், 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தல்களின்போது 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 824 தொகுதிகளைச் சேர்ந்த 18 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் 2 கோடியே 70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க உள்ளனர்.
நமது செய்தியாளர்
#தேர்தல் #தமிழகம் #4மாநிலத்தேர்தல்