அக்னி பரீட்சையாக எனது ஆட்சிக்காலம் அமைந்து விட்டது என்று கண்ணீர் மல்க எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது.
ஆனால், கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏ.க்களுக்கு பெங்களூருவில் இன்று காலை எடியூரப்பா விருந்து அளித்துள்ளார்.
அப்போது எனது ஆட்சிக்காலம் முழுவதும் அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டது என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.மேலும் , ராஜினாமா தனது சொந்த முடிவு என்றும் அவரை யாரும் வெளியேற கட்டாயப்படுத்தவில்லை என்றும் எடியூரப்பா தெளிவுபடுத்தினார்.எதேனும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பணியாற்ற அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, நான் மாநிலத்தை விட்டு வெளியேறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை.
மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். அடுத்த தேர்தல்களில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு நான் பணியாற்றுவேன்.’ என்று எடியூரப்பா கூறினார்.