மத்திய அரசின் சமூக வலைத்தளங்களுக்கானபுதிய விதிகளைப் பின்பற்றும் வகையில் வினய் பிரகாஷ் என்பவரை உள்நாட்டு குறைதீா்க்கும் அதிகாரியாக ட்விட்டர் இன்று நியமித்ததுள்ளது
மத்திய அரசு புதிய ஐடி விதிகளின்படி சமூக வலைத்தளங்கள் தங்களது பயனாளா்களின் புகாா்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்க உள்நாட்டு குறைதீா்க்கும் அதிகாரியினி நியமிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-இல் வெளியிட்டது.
இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, அந்த அவகாசம் மே 25-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் குறைதீர்க்கும் அதிகாரியை ட்விட்டர் நியமிக்காமல் இருந்ததால், மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்த நிலையில், உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை ட்விட்டர் நியமித்துள்ளது.