டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்ப பெறப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று எறிதல் வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
அவர், எஃப்52 பிரிவில் ) 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே அவரது வெற்றி முடிவு நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வினோத் குமாரின் வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
காரணம் என்ன
இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. . வினோத் குமார் ஆடிய அந்த F52 பிரிவுக்கு ஏற்ற உடல் பாதிப்போடு அவர் இல்லை. அந்த வகைமைப்படுத்துதலுக்குள் அவர் அடங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த F52 பிரிவு தசைகளில் பாதிப்புடையவர்கள், மூட்டுகள் செயலிழந்தவர்களுக்கான பிரிவு. இதையெல்லாம் சரியாக பரிசோதித்துதான் வினோத் குமார் விளையாட அனுமதிக்கப்பட்டிருப்பார். ஆனால், இப்போது புகார் என்று வந்தவுடன் வினோத் குமாரின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த முதற்கட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 1 குறைய வாய்ப்புள்ளது. எனினும்,பாராலிம்பிக்கின் இந்திய அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.