ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

SHARE

சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் 39 வயது பெண் இயக்குநரான க்ளோயி சாவ்.

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 3 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற திரைப்படம் நோமேட்லாண்ட். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை – என்று இந்தத் திரைப்படம் வென்ற பிரிவுகள் மூன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் க்ளோயி சாவ் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றதன் மூலம் மிகப் பெரிய சாதனைகளைப் படைத்து உள்ளார். ஆஸ்கர் விருதின் 93ஆண்டு கால வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெறும் இரண்டாவது பெண் இவர் என்பதோடு, வெள்ளை இனத்தவர் அல்லாத ஒருவர் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை முதன் முறையாகப் பெற்றார் – என்ற சாதனையையும் இவர் சாத்தியப்படுத்தி உள்ளார். இவர் இதே படத்திற்காக இதற்கு முன்னதாகவே கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இத்தனைக்கும் க்ளோயி சாவ்-க்கு நோமேட்லாண்ட் மூன்றாவது திரைப்படம் மட்டுமே, இவரது வயது 39!. அடுத்து பிரபல திரைப்பட நிறுவனமான மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘எடெர்னல்’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கி உள்ளார். அந்தத் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் பிரபல இரும்பு தொழில் அதிபரின் மகள் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • நமது நிருபர்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானில் அதிகரிக்கும் தலிபான்களின் ஆதிக்கம்!

Admin

இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு..

Admin

அமெரிக்காவில் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி!

Admin

செல்போனை முழுங்கிய இளைஞர்… சாமர்த்தியமாக காப்பாற்றிய மருத்துவர்கள்

Admin

சிவ கார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரம்ஜான் அன்று ரிலீஸ்

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கம்!

Admin

ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் நெற்றிக்கண்!

Admin

ஒரு லட்சத்தை அபராதமா கட்ட விருப்பமில்லை : சொகுசு கார் வழக்கில் விஜய் தரப்பு வாதம்

Admin

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு .. 3 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்

Admin

கொரோனாவை வென்ற இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் 44 பேர் மரணம்!

ஊசி போட்டால் மாஸ்க் வேண்டாம்! – அமெரிக்காவில் அப்படி…

Leave a Comment