வங்கக்கடலில் புயல் உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மே 24ஆம் தேதி புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே மே 26ஆம் தேதி கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், வங்கக்கடல் கரையோர உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், வானிலை ஆய்வு மையத்தில் அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
- கெளசல்யா அருண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்