நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

SHARE

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது.

இதனைத் தொடர்ந்து நாளை 2வது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய மீட் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கனவே 4 வேகப்பந்து வீச்சாளர், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணி தான் இந்தத் தொடர் முழுவதும் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தெரிவித்த நிலையில், ஷர்துல் தாகூர் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான அஸ்வின் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த பிரச்சினைக்கு காரணமே நீங்கதான் .. ஜோ பைடனை குற்றம் சாட்டும் டிரம்ப்!

Admin

”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

இரா.மன்னர் மன்னன்

மீண்டும் ரூ.100 க்கு கீழ் பெட்ரோல் விலை..இன்று நள்ளிரவு முதல் அமல்!

Admin

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

‘ ‘ இது வெறும் குழியல்ல புதையல் ’’ – அமைச்சர் தஙகம் தென்னரசு உருக்கம்!

Admin

பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனையுடன் ஜாமின்!

Admin

World Letter Writing Day : கடிதங்களை சாதாரணமா நினைக்காதீங்க

Admin

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Admin

வேலுமணி வீட்டு ரெய்டு பத்தி நான் எதுவுமே சொல்லவில்லை.. ட்விட்டர் பதிவுக்கு விளக்கமளித்த பாண்டியராஜன்!

Admin

ஒரு கோடி சப்ஸ்கிரைபர்.. முதல்வரை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் டீம்

Admin

Leave a Comment