மகசூல் – பயணத் தொடர் – பகுதி 5

tribes
SHARE

மத்தியப் பிரதேசத்தில் ஒரு தங்கை:

அகிலேஷ் நாயக். அடுத்த 6 மணி நேரத்துக்கு என் எல்லா நகர்வுகளிலும் உடனிருக்கப்போகிறவர். கண்ணில் கண்ணாடியுடன் வந்தார். என்னை ஏற்றியகையுடன் விரைந்தது அவரது வாகனம், மெல்ல ஒரு காட்டுக்குள் புகுந்தது.

பயணம் தொடங்கிய நொடி அதுதான். நேராக பழங்குடிகள் வசிக்கும் ஒரு ஊருக்குச் சென்றோம். முதலில் அந்த ஊரின் சர்பஞ்ச்-ஐ சந்திக்க சென்றோம் (அதாங்க பஞ்சாயத்து தலைவர்). 

அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் அகிலேஷ். எனக்கு என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது முகமாற்றம் எனக்கு நேர்மறையாக தெரிந்தது. அங்கிருந்து கிளம்பும்போதுதான் தெரிந்தது. இப்படி ஒருவனை ஊருக்குள் அழைத்துப்போகப் போகிறேன். உங்கள் அனுமதி வேண்டும் என்பதற்கான சந்திப்பு அது. அவர் அனுமதி மறுக்கப் போவதில்லை என்றாலும் அதுதான் முறை.

ஒரு குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ருக்மணி என்ற சிறுமி அந்த ஊரிலேயே மனநலம் குன்றிய ஒரே ஒருத்தி என்றார். ருக்மணி என்னிடம் என்னவோ நன்றாகத்தான் சிரித்தாள். 

இந்த ஊரில் ஊட்டச்சத்து குறைபாடு என்ற பிரச்சினை கிடையாது என்பது முதல் அதிர்ச்சி. அந்த ஊரிலேயே இவள் ஒருத்திதான் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவள் என்பது அடுத்த அதிர்ச்சி முரண்.

உணவுக்கும், நீருக்கும் எந்த குறையும் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. விவசாயம் இவர்களது பிரதான தொழில். கோதுமை பிரதான உணவுப்பண்டம். மற்றபடி எந்த இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்வதில்லை. 

காட்டுப்பன்றியின் தொல்லை தவிர வேறேதும் விலங்குகளின் தொல்லையில்லை. ஆனால் கல்வி? 

அருகில் பள்ளிக்கூடம் இருக்கிறதா என்று கேட்டேன். அழைத்துப்போனார் அகிலேஷ் நாயக். இந்த ஊருக்கு பள்ளிக்கூடம், அங்கன்வாடி, மருத்துவ மையம், ஊட்டச்சத்து மையம் என எல்லாமுமாக இருக்கும் கட்டிடத்துக்கு போனோம். அங்கிருந்த ஆசிரியர்கள் இருவரிடமும் (2 பேர் தான் மொத்தமே) பேசினேன். 

அவர்களிடம் பேசத்தொடங்கினேன். கூகுள் உதவியோடு. 

60 குழந்தைகள் இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இதில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் 29. இந்த 29 ல் வெறும் 3 பேர்தான் இன்று வந்துள்ளவர்கள். மற்ற எல்லோருக்கும் இன்று காய்ச்சலாம்.

கல்வியின் மீது பெரிதாக இந்த பெற்றோர்களுக்கும் விருப்பமில்லை. இவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்த ஆசிரியர்கள், அருகிலிருக்கும் ஊட்டச்சத்து மையத்தை போய் பாருங்கள் என்றார்கள். 

பள்ளிக்குள் 3 பேர் என்றால், இங்கு 7 பேரை பார்த்தேன். முதலில் என் கண்ணில் பட்டவள் ருக்மணிதான். சிரித்தபடியே அவள் சொன்ன ’பையாஆஆ’ வில் ஏதோ ஆகிப் போனேன். மத்தியப் பிரதேசத்தின் முதல் தங்கச்சி.

சாப்பாட்டு நேரம் அவளுக்கு இங்குதான். வினிதா என்ற ஊட்டச்சத்து பணியாளர் அங்கிருந்த ஒவ்வொரு குழந்தை குறித்தும் விளக்கினார். எப்படியும் எனக்கு முழுமையாக தன்னால் முடிந்தவரை ஆங்கிலத்தில் சொன்னார் எனக்காக.

அவர்களது விவசாயக் காடுகளுக்குள் நடந்து ஊரின் அந்த பக்கம் வந்தோம். அங்கே ஒரு 10 பேர் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அதன் நடுநாயகமாக இருந்த ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெயர் பாக்ராம்.

இந்த பகுதியின் விவரமான அரசியல்வாதி என்று சொன்னார். பேசத்தொடங்கினோம். அப்படியா, அந்த ஊர் அரசியல்வாதியிடம் பேசுகிற அளவுக்கு உனக்கு இந்தி தெரிந்துவிட்டதா? என்று கேட்கிறீர்கள். அதுதானே? 

அது ஒரு தனிக்கதை : ஆங்கிலத்தில் நான் பேசி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கூகுள் ட்ரான்ஸ்லேட் பக்கத்தை அவரிடம் காட்டுவேன். 

அவர் அதற்கு, இந்தியில் ஃபோனைப் பார்த்து பதில் பேச, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட  அந்த பதிலை நான் படித்துக் கொள்வதுமாக அந்த உரையாடல் நகர்ந்தது.  மெல்ல மெல்ல தொழில்நுட்பத்தின் தேவை குறைவதை என்னால் உணர முடிந்தது.

அந்த ஊர் குறித்தும், அவர்களது இடர் குறித்தும் சுற்றிப்பார்த்து புரிந்துகொள்வது முடியாத காரியம். அதையேதான் அவரும் சொன்னார். இங்கிருந்து போகும் போது நீங்கள் எடுத்துசெல்வதற்கு எங்களிடம் வினோதமாக ஒன்றும் இல்லை. வேண்டுமானால் நீங்கள் பழக்கப்படாத ஒன்றை வினோதம் என்று புரிந்து கொள்வீர்கள்.

நான் ஒன்று சொல்கிறேன். எங்களுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை. எங்களாலும் யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் யார்யாருக்கோ நாங்கள் பிரச்சினையாக தெரிகிறோம். கழுத்தில் இருந்த சிவப்பு துண்டை உதறிக்கொண்டார்.

எங்களுக்கு என்றொரு வாழ்க்கை இருப்பது போல இங்கிருக்கும் 49 பஞ்சாயத்துக்குள்ளும் ஏராளமான வாழ்க்கை இருக்கிறது. எல்லாருக்கும் இருப்பது ஒரே பிரச்சினைதான். வறுமை. 

முடிந்தால் இந்த பகுதியின் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். உங்கள் எதிர்காலக் கல்விக்கு அது உதவும்.

30 நிமிட பேச்சில் அவர் எனக்கு உணர்த்த நினைத்தது இதைத்தான்.  பழங்குடியினரின் பகுதிகளுக்கான பஞ்சாயத்து நீட்டிப்பு சட்டம் குறித்தும், அட்டவணை 5 குறித்தும், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றையும் காட்டினார்.  

நிச்சயம் படிக்கிறேன். நன்றி என்றபடி அந்த அறிவிக்கையை வாங்கி கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். 

இதற்கிடையில், யாரோ ஊருக்குள் வந்திருப்பதாக கேள்வியுடன் ஒரு போன் வந்தது. நான் வந்தது தொடர்பாக அகிலேஷுக்கு. ஜன்பத் அலுவலகத்தில் இருந்து வந்த, அந்த அழைப்புக்கு மறுமொழியாக நாங்கள் நேரிலேயே சென்றுவிட முடிவெடுத்தோம்.  இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

-தொடரும்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

நீதிபதிகள் புகார் அளிக்க சுதந்திரம் இல்லை: நீதிபதி ரமணா வேதனை

Admin

ஒரு வாரமாக தொடரும் உண்ணாவிரதம்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் வேண்டும்

Pamban Mu Prasanth

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

மைக் சின்னம்: நாம் தமிழர் கட்சிக்கு இதெல்லாம் ஒரு சவாலே அல்ல.

Pamban Mu Prasanth

இதெல்லாம் எனக்கு சகஜம்… எளிதாக வெற்றி பெற்ற பி.வி.சிந்து…

Admin

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

வேளாண் பட்ஜெட் நடைமுறைக்கும் வருமெனில் தமிழகம் சிறக்கும் – கமலஹாசன்

Admin

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Admin

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment