பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அதே சமயம் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
ஆப்கானில் உள்ள தலிபான்களுடன் பாகிஸ்தான் இணக்கமாகச் செல்ல இம்ரான் கான் அரசு விரும்புவதாக பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் ஏற்கனவே கூறியிருந்த நிலையில்பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி நாளை ஆப்கன் தலைநகர் காபூலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்