கொரோனா சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து வரும் வரும் நிலையில் தமிழக அரசு நோய் பரவலை முழுவதும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள சமையல் கூடத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் தோசை சுட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தோசை எப்படி சுட வேண்டும் என்பது குறித்த சில அறிவுரைகளை சமையல் கலைஞர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மூவேந்தன்