கடந்த 24 மணிநேரங்களில் உலக அளவில் அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பெற்று உள்ளது!.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 92,998 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு அடுத்து அமெரிக்காவில் 65,200 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும், இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 514 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் 1931 பேரும், அமெரிக்காவில் 793 பேரும், போலந்தில் 571 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கையில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.
இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,484,127 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 164,655 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் புதிய கொரோனா அலை வலிமையடைந்து வருவதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்குக் கூறுகின்றன.
எனவே மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறிதும் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது!.
- நமது நிருபர்.