திருக்கோயில்களில் மொட்டை போடும் 1,749 பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஐந்தாயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,
திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் 1,749 பேர் பயனடைவார்கள் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.