நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் இன்றுஆலோசனை நடத்த உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாக கூறிய நிலையில் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்பின்னர் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த சூழலில், உடல்நல குறைவு ஏற்பட்டது, அதனால் அரசியலில் ஈடுபட முடியாது என ரஜினி அறிவித்து, தன்னோடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகள் தங்களது மக்கள் மன்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இணைந்தனர். இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமையில் 6 முக்கிய நபர்கள் திமுகவில் இணைந்தனர்.
அண்மையில் அண்ணாத்தே படப்பிடிப்பை முடித்து விட்டு தனது உடல்நிலை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் வேறு கட்சிகளுக்கு சென்ற நிர்வாகிகளுக்கு மாற்றாக பணியமர்த்தப்பட்ட நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களையும் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து நிலையில் இன்று நாளை செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி.
அப்போது பேசிய அவர், நான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என மக்களுக்கு சந்தேகம் உள்ளது, அது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன் என்று கூறினார்.