கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடியது. பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் போராடி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது, இதுவரை 107 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அரசு காப்பகங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை வைத்து தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதிபெறுவதையும், குழந்தைகள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.