தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

SHARE

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

இதில்  நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். 

மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்திய நீதிபதிகள் 2aaவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

  • கெளசல்யா அருண்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 8

Pamban Mu Prasanth

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா? – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Admin

ராஜீவ்காந்தி விருதை மாற்றியது அரசியல் காழ்ப்புணர்ச்சி: காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

Admin

கேரள முதல்வராக வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

”கை நழுவிய காதல்..!”. மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 2.

இரா.மன்னர் மன்னன்

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

காசிமேடு, திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி: தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

Admin

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

மேதகு – தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டிய பெருமிதம்!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Admin

Leave a Comment