தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் நீதிபதிகள், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி ஒதுக்கீடு மட்டும் குறைவாக இருப்பது ஏன் என விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
மருந்து, தடுப்பூசி ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்திய நீதிபதிகள் 2aaவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகம், புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
- கெளசல்யா அருண்