சாதித்த சூப்பர் கிங்ஸ்… பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தேர்வானது!.

SHARE

நேற்று ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக இடம்பிடித்துள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாஹா மற்றும் ஜேசன் ராய் நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர். 4ஆவது ஓவருக்கு வந்த ஹசில்வுட்டின் பந்து, ஜேசன் ராயின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் சென்றதால் முக்கிய விக்கெட் அவுட்டானது. அடுத்து வந்த கேன் வில்லியம்சன், ஃப்ராவோவின் யார்க்கர் பந்தில் வெளியேறினார். இதற்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியில் நல்ல ஆட்டத்தை எவராலும் கொடுக்க முடியவில்லை. ரன் ரேட்டும் குறைவாகவே இருந்தது. 

அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகினர். இறுதியில் சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர்களுக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. பந்துவீச்சில் ஹசில்வுட் பிரமாதமாக பந்துவீசி 4 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதே போல் ஃப்ராவோவும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அடுத்து 135 ரன்கள் இலக்கு என்று ஆட வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர்கள் ருதுராஜ் மற்றும் டுப்ளஸி நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். 

11ஆவது ஓவரில் ஹோல்டரின் பந்தில் ருதுராஜ் கேட்சாகி  விக்கெட் விழ 4 பவுண்டரி 2 சிக்ஸர்களோடு 45 ரன்களில் வெளியேறினார். ஆனாலும் சன்ரைசர்ஸ் அணியை வெல்லா நான் மட்டும் போதுமே என்பது போல் டுப்ளஸி சிறப்பாக விளையாடினார். அடுத்து வந்த மொயின் அலி ரஷித் கானின் பந்தில் ஃபோல்டாகிட, அடுத்து வந்த ரெய்னாவும் ஹோலரின் 16ஆவது ஓவரில் வழக்கம்போல் வந்த வேகத்தில் அவுட்டானார். அடுத்து டுப்ளஸியும் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

அடுத்து களமிறங்கிய தோனி மற்றும் ராயுடு ஆளுக்கு 1 பவுண்டரி 1 சிக்ஸர் என 2 பந்துகள் மீதமிருக்க ஆட்டத்தின் கடைசி பந்துக்கு  தல தோனியின் சிக்ஸரோடு சென்னை அணியின் வெற்றி உறுதியானது. சிறப்பான பந்துவீச்சிற்காக ஹசில்வுட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

இங்கிலாந்தை ஓட ஓட விட்ட இந்திய அணி – ஓவல் டெஸ்டில் அபார வெற்றி

Admin

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்த இந்திய சிங்கப்பெண்கள்…!

Admin

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

வீணான இஷான் கிஷனின் சாதனை. வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்…

மயங்கி விழுந்த நட்சத்திர வீரர்..நிறுத்தப்பட்ட யூரோகால்பந்து போட்டி!

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

காதல் சுகமானது.. மைதானத்தில் இணைந்த இதயங்கள்.. வைரலாகும் வீடியோ!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்… சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா…

Admin

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment