நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பாபா ராம்தேவ் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பேவிபுளு உள்ளிட்ட மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என கூறியிருந்தார்.
இப்படியாக பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்த நிலையில், நவீன மருத்துவத்தை அவதூறாக பேசிய அவர் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ரூபாய் 1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- பிரியா வேலு