GQ (மாதந்திர பேஷன் மேகசின் ) 35 Most Influential Young Indians Award நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மும்பை சென்ற நயன்தாரா, அந்த விழாவில் அணிந்திருந்த டிரஸ் இது. நயனின் இந்த deep neck black ஆடையை, ”பழிவாங்கும் கருப்பு ஆடை’ (Revenge Black Dress ) போல இருக்கிறது என்று ஆங்கில பத்திரிக்கைகள் எழுதியுள்ளன. ஏன்?
அதென்ன பழிவாங்கும் கருப்பு ஆடை
அதென்ன பழிவாங்கும் கருப்பு ஆடை (Revenge Black Dress ) என்று கேட்டீர்களேயானால். அந்த ஆடைக்குப் பின்னால் சூரியன் அஸ்தமிக்காத பிரம்மாண்ட சாம்ராஜ்யமும், படுதோல்வியுற்ற திருமணமும், உலகம் கொண்டாடிய இளவரசியின் கண்ணீரும் இருக்கிறது.
ஆமாம். இங்கிலாந்து அரச குடும்பம்தான் அந்த சாம்ராஜ்யம்.
கருத்து வேற்றுமை காரணமாக இளவரசர் சார்லஸும் அவரது மனைவி இளவரசி டயானாவும் விவாகரத்து பெறுகிறார்கள். உலகையே அதிரச்செய்த விவாகரத்து இது.
இந்த பிரிவிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சார்லஸ் ஒரு பேட்டி அளிக்கிறார். அந்த பேட்டியில் ”’ஆமாம். எனக்கு திருமணத்திற்கு வெளியே ஒரு உறவு இருந்தது. நான் டயானாவோடு வாழ்ந்தபோதே, இன்னொரு பெண்ணுடன் (சார்லசின் தற்போதைய மனைவி கமீலாதான் அந்த இன்னொரு பெண் ) உறவில் இருந்தேன். அதனால்தான் நாங்கள் விவாகரத்து பெற்றோம்””’ என்று இளவரசர் சார்லஸ் வாக்குமூலம் கொடுத்தார்.
இங்கிலாந்து பத்திரிகைகள் அலறின. சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் இங்கிலாந்து மன்னர் குடும்பத்தை கடுமையாக விமர்சித்தன.
இந்த பேட்டி வெளிவந்த மறுநாள், ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த இளவரசி டயனா, மன்னர் குடும்பத்தின் dress code-களை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு அவர் வாழ்நாளில் அதுவரை அணிந்திராத அளவுக்கான கவர்ச்சியான உடையை அணிந்து வந்தார்.
கழுத்து பகுதியும், அவருடைய முழ தோள்பட்டை பகுதியும் தெரியுமளவிற்கு deep-பான கழுத்துப் பகுதியை கொண்ட black gown-னில் வந்தார் அவர்.
டயானாவின் அந்த செயல் அரச குடும்பத்திற்குள் மிகப்பெரும் கலாச்சார அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இளவரசர் சார்லசை பழி வாங்குவதற்காகவே டயானா இப்படியொரு ஆடையை தேர்வு செய்து அணிந்து வந்தார் என்று எழுதின அன்றைய பத்திரிக்கைகள். அதனாலயே அந்த ஆடைக்கு Revenge Black Dress என்ற புகழ்பெற்ற பெயர் வந்தது.
அதற்குப்பின் இப்படியான deep neck gown-களை எல்லாம் Revenge Black Dress என்று கூற ஆரம்பித்தார்கள்.