உ.பி.,யில் வசமாக சிக்கிய பாஜக… மேற்கு வங்க அரசின் மேம்பாலத்தை தாங்கள் கட்டியதாக விளம்பரம்…

SHARE

உத்தரப்பிரதேச மாநில அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்த விளம்பரத்திற்கு மேற்கு வங்கத்தில் உள்ள படத்தை பயன்படுத்தியதால் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

மேற்கு வங்கம் தலைநகர் கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசு கட்டிய மேம்பாலம் ஒன்றின் புகைப்படங்களை தங்கள் மாநில அரசின் விளம்பரத்துக்காக உத்தரப்பிரதேச பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள இந்த பாலம் நகரின் மத்தியப் பகுதியையும், சால்ட் லேக் , ராஜர்ஹட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்கத்தாவின் அடையாளங்களாகக் கூறப்படும் மஞ்சள் டாக்சி, 5 நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றுக்கு அடுத்து இதுவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நேற்று ஆங்கில நாளேடு ஒன்றில் இந்த மேம்பாலத்தின் புகைப்படத்தை தங்கள் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களாக சித்தரித்து விளம்பரம் வெளியிட்டு உள்ளது.

இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ‘உத்தரப்பிரதேசத்தை மாற்றுகிறேன் என யோகி ஆதித்யாத் கூறுவதெல்லாம், மேற்குவங்கத்தில் முதல்-மந்திரி மம்தா தலைமையில் கட்டப்பட்ட பாலங்களை, கட்டமைப்பு வசதிகளின் புகைப்படங்களை திருடி பயன்படுத்தி, தாங்கள் கட்டியதாக காண்பிப்பதுதானா?.

பாஜகவின் வலுவான மாநிலத்தில் இரட்டை எஞ்சின் மாடல் அரசு தோல்வி அடைந்துவிட்டது, அவர்களின் நிலைப்பாடு வெளிப்பட்டுவிட்டது’ என விமர்சித்துள்ளார்.

இந்த விளம்பரம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், ‘முதலில் வேலைவாய்ப்புக் குறித்து பொய்யான விளம்பரத்தை அளித்து உத்தரப்பிரதேச பா.ஜக அரசு சிக்கிகொண்டது. இப்போது, அவர்களின் விளம்பரத்தில் பொய்யான மேம்பாலம், தொழிற்சாலை புகைப்படங்களை வெளியிட்டது அம்பலமாகியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு மாநில மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் மீது அக்கறையும் இல்லை. பொய்யான விளம்பரங்களை வெளியிட்டு உரிமை கொண்டாடுகிறது’ என தெரிவித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் உத்தரப்பிரதேச அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த நாளேட்டின் ஆன்லைன் பதிப்பில் இந்தப் பாலத்தின் புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

மேலும் அந்த நாளேடு அளித்த விளக்கத்தில் ‘உத்தரப்பிரதேச அரசின் விளம்பரத்துக்காக எங்களின் விளம்பரத்துறை தவறான புகைப்படத்தை பதிவிட்டுள்ளது.

தவறுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். அனைத்து டிஜிட்டல் பதிப்பிலும் இந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

Air Pollution: இந்தியர்களின் ஆயுளில் 9 ஆண்டுகள் பறிபோகும்: எச்சரிக்கை

Admin

வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடு முழுவதும் கறுப்பு தினம் அனுசரிக்கும் விவசாயிகள்

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

குதிரை உடல் முழுவதும் பிஜேபி விளம்பரம் .. புகார் கொடுத்த மேனகாகாந்தி

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

வருகிறது வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: மருத்துவ கவுன்சில் அனுமதி!

பூசாரி உரிமையாளராக முடியாது .. கோவில் சொத்து விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு

Admin

கேரளாவை மீண்டும் உலுக்கிய வரதட்சணை மரணம் – பொதுமக்கள் அதிர்ச்சி

Admin

சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் அழைப்பு

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

ஆரத்திக்கு பணம்: ஆட்சியரின் நடவடிக்கை திட்டமிட்ட கூட்டுசதியா? அதென்ன 5 கோடி அண்ணாமலை?

Pamban Mu Prasanth

Leave a Comment