கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்க இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற உள்நாட்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது.
இதனிடையே உலக சுகாதார நிறுவனத்தின் அவசர காலப் பயன்பாட்டுப் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசியை இணைக்க பாரத் பயோடெக் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்களுடன் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவசர கால பயன்பாட்டு அனுமதி அளிப்பதற்கான தேதி இனிதான் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்