பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்ஆப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கன மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், பொது மக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை தெரிவிக்க பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண் அளிக்கப்பட்டுள்ளது.
தங்களது பகுதிகளில் நிகழும் பேரிடர்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மட்டுமல்லாது, இணையம் உபயோகிக்காத மக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பேரிட ர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள மக்கள் களம் என்ற தளத்தில் புகைப்படத்துடன் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே,எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
– மூவேந்தன்