இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

SHARE

தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவ வாகை சந்திரசேகர். 1991ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் .

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமித்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்தவும், தமிழக கலைகளை பாதுகாத்து வளர்க்கவும்.

தமிழக அரசின் திட்டங்களால் கலைஞர்கள் பலனடையச் செய்யவும், பல்வேறு கலை பணிகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தவும் வாகை சந்திரசேகரை தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற புதிய தலைவராக நியமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

உலகளவில் சிறந்த 25 படங்கள்! யோகிபாபு , தனுஷ் நடித்த படங்கள் தேர்வு!

Admin

15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்தது காங்கிரசுக்கு உதவுமா? – முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது : பேரவையில் கடுப்பான அமைச்சர் செந்தில் பாலாஜி

Admin

கமலின் அரசியலில் கை வைக்கும் போராட்டங்கள்… வெறுப்பைத் தூண்டுகிறதா அமரன்? சிக்கலில் கமல்

Pamban Mu Prasanth

அஞ்சிஅடிபணிவது தமிழர் பரம்பரைக்கே கிடையாது துணிந்து நில் தம்பி: விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

Admin

டெடியாக நடித்தது இவர்தான்: புகைப்படம் வெளிட்ட ஆர்யா

Admin

தலிபான்கள் ஆதிக்கம் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்: காா்த்திக் சிதம்பரம் எம்.பி.

Admin

கோமா… உடல்நலக் கோளாறு… ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த சாந்தன் இறப்பு

Pamban Mu Prasanth

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

Leave a Comment