விரைவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தை துக்ளக் நாளிதழ் கிண்டல் செய்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.
அந்த வகையில் அறநிலையத்துறை கோவில் சொத்துகளை பொது இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், ஆகம பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அறிவிக்கப்பட்டன. அடுத்து பெண்களும் அர்ச்சகராவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழக அரசின் திட்டத்தை விமர்சித்துள்ள துக்ளக் இதழ், இது குறித்து தனது அட்டை படத்தில் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
அதில் விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி மற்றும் திக தொண்டர் ஆகியவர்கள் இடையே நடக்கும் உரையாடலை கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பலரது கோபத்திற்கு ஆளாகி உள்ளது.
- மூவேந்தன்