ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஏடிஎம் காவலாளி , ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த ஏடிஎம் காவலாளி ஒருவர் தான் பணிபுரியும் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் மீது வேப்பிலையை வைத்துள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தினமும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது இந்த வேப்பிலையை வைத்து இருப்பதாகவும் வேப்பிலை வைப்பதால் கொரோனா தொற்று பரவாது என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது இந்த வேப்பிலை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.