தற்போது தமிழர் நாகரித்தினை பறை சாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அகழ்வாரய்ச்சிகள் நடந்து வருகிறது .
குறிப்பாக கீழடி,குந்தகையில் நடைபெற்று வரும் அகழ்வாரய்ச்சிகள் தமிழரின் பெருமையினை உலகிற்கு ஆதாரத்தோடு அறிவித்துள்ளாது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் பழந்தமிழர்கள் பயன்படுத்திய கோடரி,கத்தி ,ஜாடி போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு இது வெறும் குழியல்ல புதையல் என்றும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
ஆம், மண்ணோடு அவை கலந்தாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியாதாக கூறப்படும் தமிழ் குடியின் வரலாற்றை ஆதாரத்தோடு கூறுவதால் அது புதையல்தான்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்