21 வயதேயான இந்திய வம்சாவளி பெண் பிரிட்டனின் உயரிய விருதினை பெற்றுள்ளார்.
கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர் அமிகா ஜார்ஜ். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, மாதவிடாய் காரணமாக ஏழை எளிய மாணவிகள் பலர் வகுப்புக்கு வராமல் இருந்துள்ளனர்.
இதனை குறிப்பிட்டு, பள்ளி, கல்லூரிகளில் இலவச நேப்கின்கள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமிகா அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அதன்பயனாக கடந்த 2020ம் ஆண்டு கல்வி நிறுவனங்களுக்கு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.
இந்தநிலையில், இவரது செயலை பாராட்டி, ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிரிட்டனின் மிக உயரிய, பிரிட்டிஷ் பேரரசின் உறுப்பினர் வரிசைக்கான (Member of the Order) விருது வழங்கப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்