கீழடி அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான நாணயம் கண்டெடுப்பு..!!

SHARE

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் சதுர வடிவ வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி முதல் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.

கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான வெள்ளி நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் முன்புறம் சூரியன், நிலவு, விலங்குகள் உள்ளிட்ட உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

முத்திரை நாணயம் என்ற வகையைச் சேர்ந்த நாணயம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் தற்போது கிடைத்துள்ள வெள்ளி முத்திரை நாணயம் வணிகத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்ஸ் அப் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

ஜூன் 4 ஆம் தேதி ரிசல்ட் : தமிழ்நாட்டுக்கு தேர்தல் எப்போது? வெளியானது தேர்தல் தேதி

Admin

தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

Admin

வெம்பக் கோட்டை அகழாய்வு – வெளிவரத் தொடங்கிய தமிழர் பொக்கிஷங்கள்!.

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் விமர்சனம் செய்யக்கூடாது..!!

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

Leave a Comment