கொரோனா தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
தமிழகத்தில் கொரோன தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அலோசனைக் கூட்டம் நடைபெற்றது
. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் தொற்றின் உயர்வு, அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன்படி கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து.
மத வழிப்பாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
சமய விழாக்களை முன்னிட்டு மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை
பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுக்களை நடத்துவதற்கு தடை
விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலைகளை நிறுவ, வழிபாடு நடத்த தடை
சாந்தோம் தொடங்கி, நேப்பியர் பாலம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க தடை
சென்னை,வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் இதர இடங்களில் கிறித்துவ சமயத்தாரால் கொண்டாடப்படும் மரியன்னையின் பிறந்தநாள் திருவிழாவின்போது, பொது இடங்களில் கூடுவதற்கு தடை
1 comment
[…] செப்டம்பர் 15- வரை ஊரடங்கு நீட்டிப்பு : … […]