தாலிபான்களுடன் சீனா பேச்சு வார்த்தை நடத்த தயார் என்பது இந்தியாவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம்
எல்ஐசியை தனியார் மயமாக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு தமிழகத்தின் பொருளாதாரத்தை தொலைத்து விட்டதாகவும் அதைத்தான் திமுக வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக தமிழக அரசு திகழ்வதாக கூறிய கார்த்திக் சிதம்பரம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தது இந்தியாவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என கூறினார்.
மேலும், ஆப்கானில் தாலிபான் அதிகாரம் செலுத்தும் போது இந்தியாவில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இந்தியாவிற்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் வரும். பாகிஸ்தானை கூட தாலிபான்கள் கைப்பற்றும் என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக கூறினார்.